கேரளா சென்ற மகாத்மா காந்தியிடமிருந்து, நம்பூதிரிகள் விலகியே இருந்ததும், அதற்கு தீண்டத்தகாத நபர்களை காந்தி தொட்டு, தன்னையே தீண்டத்தகாதவராக மாற்றியிருக்கலாம் என்று அவர்கள் நம்பியதுமே காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?

1920ம் ஆண்டு காலத்தில், கேரளாவின் அப்போதைய திருவிதாங்கூர் மாவட்டத்தில் இருந்த சிறிய கிராமமான வைக்கம் கிராமம் தான் சாதிய ஒழிப்புக்கு விதையாக இருந்தது என்று சொல்லலாம். இன்றைக்கு கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் பகுதியில் அப்போது, தாழ்ந்த சாதியினர், குறிப்பாக தலித்கள் கோவில்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சில பகுதிகளில் கோவில் இருக்கும் தெருக்கள் வழியாக செல்லவே அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பத்திரிக்கையாளர் டி.கே மாதவன் தலைமையில், கே.கேளப்பன், கே.பி கேசவ மோகன் ஆகியோரை உள்ளடக்கிய தீண்டாமை எதிர்ப்பு குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவின் மூலம் இந்துக்களில் உள்ள அனைத்து சாதியினரையும் ஒன்று சேர்ப்பதோடு, பிராமன முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்கிற முடிவு எடுக்கப்பட, அதற்கு அரசியல் ரீதியிலான ஆதரவும் கிடைத்தது. இந்த குழு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலை கண்டுபிடித்து, அங்கு தங்களின் முடிவுகளை சோதனையிட முடிவெடுத்தனர்.

இது தொடர்பாக மகாத்மா காந்திக்கு தகவல் கிடைக்க, யங் இந்தியாவில் இவைகளை பற்றி எழுதியுள்ள காந்தி, “திருவிதாங்கூரில், சத்தியாக்கிரகங்கள் ஒரு முழு முறைபாடுகளையும் தாக்கவில்லை, மாறாக சில மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராடுகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் போனால், நிச்சயம் பாதை தவறுவார்கள். அதேநேரம், மக்களிடமும், பொதுக்கூட்டம், சந்திப்பு போன்றவைகளை விளக்கவும் வேண்டும். நேரடி நடவடிக்கை எப்போதும் பிற நிலையான முடிவை தராது” என்று கூறியிருந்தார்.

மார்ச் 30, 1924ம் ஆண்டு வைக்கம் சத்தியாகிரக குழு அறிவித்தது உறுப்பினர்களுடன், பல்லாயிரக்கணக்கிலான மைல் தூரத்திற்கு தங்களது முழக்கங்களை முன்வைத்து யாத்திரை மேற்கொண்டனர். ஒரு வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி, நகரத்தின் சூழல் காந்திய லட்சியத்தின் படி அமைதி மற்றும் பற்றி எரியும் தேசிய உணர்வுகளை வெளிக்கொண்டுவருவது போல இருந்தது. பஞ்சாபில் உள்ள அரசியல் கட்சியான அகாலிதளம் சத்தியாக்கிரகங்களுக்கு சாதி வேறுபாடு இன்றி உணவுகளை தயாரித்து வழங்க, ஒரு குழுவை அனுப்பியதாக கூறப்படுகிறது.

முதல் நாளின் போது தீண்டாமை ஒழிப்பு குழுமத்தை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, ஒருவரை ஒருவர் கரம் கோர்த்துக்கொண்டு, தடை விதிக்கப்பட்ட சாலைகளுக்கு செல்ல முற்பட்டனர். ஆனால் அப்போதைய மாநில காவல்துறைக்கு, கோவில் நம்பூதிரிகள் அளித்த புகாரின் காரணமாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பலரும் காவல்துறையின் பேரிகார்டுகளை மீறி செல்லாமல், அமைதி காத்ததும் பலரை ஆச்சரியப்படுத்தியது. இந்த குழுவின் சத்தியாகிரகத்தில் பங்கெடுத்த ஒருவர் தான் இ.வே ராமசாமி நாயக்கர். இவர் 2 முறை இந்த சத்தியாகிரக பயணத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதே ஆண்டு நவம்பர் இறுதியில் திருவனந்தபுரம் ராணியிடம், சாதிய ஒழிப்பை ஏற்படுத்தக்கோரி இக்குழுவினர் மனு ஒன்றை அளித்தனர். ஆனால் கடைசி வரை அவர்களின் போராட்டத்திற்கு தீர்வு ஏற்படவே இல்லை.

மார்ச், 1925ம் ஆண்டு சத்தியாகிரகத்தில் பங்கேற்க காந்திக்கு இக்குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது இந்திய தேசிய காங்கிரஸ், கோவில்கள் மற்றும் சாலைகளில் தலித் அனுமதிக்கப்படுவதற்கு ஆதராவன நிலைபாட்டை எடுத்திருந்தது.

மார்ச் 11, 1925ம் ஆண்டு வைக்கம் கிராமத்தை வந்தடைந்த காந்தி, பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். பின்னர் சத்தியாகிரக போராட்டக்காரர்களை சந்தித்து, அவர்களை ஊக்கப்படுத்தினார். அத்தோடு, திருவனந்தபுரம் ரானியையும் சந்தித்த காந்தி, வைக்கம் கோவில் நம்பூதிரியையும் சந்தித்து பேசினார். அப்போது, அவரிடமிருந்து விலகியே நம்பூதிரிகள் இருந்தனர். ஏனெனில், தீண்டத்தகாத நபர்களை காந்தி தொட்டு, தன்னையே தீண்டத்தகாதவராக மாற்றியிருக்கலாம் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள்.

வர்கலா ஆசிரமத்தில் ஸ்ரீ நாராயண குரு என்கிற கேரளாவின் முக்கியத்துவம் வாய்ந்த அறிஞருடன், காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா தனது காந்தி எனும் புத்தகத்தில், “உலகத்தை ஆண்டுகள் மாற்றிக்கொண்டிருந்த நேரம், குருவின் திட்டத்தால் காந்தி ஈர்க்கப்பட்டார். ஆனாலும் இருவரும் வெவ்வேறு கொள்கைகளை கொண்டவர்கள்” என்று தெரிவித்திருந்தார்.

காந்தி, பெரியார் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடத்திய போராட்டத்தால், தங்களது முந்தைய நிலைபாட்டில் இருந்து கீழ் இறங்கி வந்த திருவிதாங்கூர் சமஸ்தானம், தாழ்த்தப்பட்டவர்களுக்காக கோவில் இருக்கும் 3 அல்லது 4 தெருக்களை பயன்படுத்த 1925ம் ஆண்டு அனுமதி அளித்தனர். ஆனால் 1936ம் ஆண்டு அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் செல்ல நிறைவேற்றப்பட்ட சட்டம் வந்த பின்னர் தான், அனைத்து தரப்பு மக்களும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மலையாள நாட்டில், சுதந்திரம் மற்றும் சமூக போராட்டங்களை ஒன்றிணைக்க வைக்கம் ஒரு கருவியாக இருந்திருக்கிறது.