உத்தரபிரதேசத்தில் காந்தி சிலைக்கும் காவி நிறம் பூச்சு…..போலீசில் புகார்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல் அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களுக்கு காவி நிற பெயின்ட் அடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் அரசு பள்ளியில் உள்ள காந்தி சிலைக்கும் காவி நிறம் பூசப்பட்டடுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் சஹஜஹான்பூர் மாவட்டம் பண்டா தேசில் பகுதி தாகா கன்ஷியாம்பூர் கிராமத்தில் தொடக்க பள்ளியில் காந்தி சிலை பல ஆண்டுகளாக உள்ளது. அந்த சிலைக்கு புது கலர் அடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காந்தி சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் பள்ளி நிர்வாகம் மீது போலீசில் புகார் செய்தனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Mahatma Gandhi idol painted saffron in uttar pradesh Shahjahanpur, உத்தரபிரதேசத்தில் காந்தி சிலைக்கும் காவி நிறம் பூச்சு.....போலீசில் புகார்
-=-