மகாத்மா காந்தி நினைவு நாள்: முதல்வர் ஓபிஎஸ் மரியாதை!

சென்னை,

ன்று மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் 70-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதையொட்டி சென்னை  மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே பள்ளிக்குழந்தை களின் பஜனை நடைபெற்றது.

அதையடுத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப் படத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து  அவருடன்  அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும், காந்தியின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

அதேபோல் நாடு முழுவதும் காந்தியின் நினைவு நாளையொட்டி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.