ஊபர், அமேஜான், நியூஸ் ஆப் வரப் போவதை 100 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த மகாத்மா காந்தி

புதுடெல்லி:

ஊபர், அமேஜான், நியூஸ் ஆப் மற்றும் ஜொமேட்டோ எல்லாம் ஒரு காலத்தில் வரும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி கணித்து சொல்லியிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?


ஒருநாள் நமக்கு கை,கால்களின் பயன் இல்லாமல் போகும். ஒரு பட்டனை அழுத்தினால் உடை வரும். மற்றொரு பட்டனை அழுத்தினால், பத்திரிகை வரும் என்று எழுதியிருக்கிறார் அந்த தீர்க்கதரிசி.

உலகமே ஒரு பட்டனுக்குள் அடங்கப் போகிறது. துணி, உணவு, வாடகை வாகனம் ஆகியவற்றைப் பெற பட்டனை அழுத்தினால் போதும் என்ற நிலை உருவாகும். என்ன தேவைப்படுகிறதோ, பட்டனை அழுத்தினால் கிடைத்துவிடும் என்று எழுதியிருக்கிறார்.

இன்றைய இன்டெர் நெட் பற்றியும் தேசப்பிதா கணித்துள்ளார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
உலகம் கணிணி, சிப்ஸ் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையெல்லாம் அரசியல் விஞ்ஞானி டேவிட் ரன்ஸிமேன் எழுதிய முடிவுறும் ஜனநாயகம் என்ற நூலில் குறிப்பிட்டு மெய்சிலிர்க்கிறார்.

காந்தியின் இந்து ஸ்வராஜ் புத்தகத்தில் இவை அனைத்தையும் மகாத்மாக காந்தி எழுதியுள்ளதாக குறிப்பிட்ட ரன்ஸிமேன், அப்போது இதை கேட்டு நகைத்தவர்கள் எல்லாம் இப்போது வாயடைத்துப் போயிருப்பார்கள். அதுதான் மகாத்மா காந்தி.

ஒருநாள் இந்த உலகம் நியூஸ் ஆப், ஊபர் மற்றும் அமேஜான் போன்றவை பின் ஓடப்போகிறது என்பதை எவ்வாறு மகாத்மா காந்தி கணித்தார் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் ரன்ஸிமேன்.