இங்கிலாந்து அதிகாரிக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலம் விட முடிவு

இங்கிலாந்து அதிகாரிக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலம் விட உள்ளது. ஒரு பக்கத்திற்கு எழுதப்பட்ட அந்த கடிதம் ஆன்லைன் மூலம் ஏலம் விட உள்ளது.

Mahatma

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா மற்றும் பர்மாவிற்கு செயலாளராக இங்கிலாந்தை சேர்ந்த பெத்திக் லாரன்ஸ் பிரபு பதவி வகித்தார். அவருக்கு 1946ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மகாத்மா காந்தி கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு எழுதப்பட்டது.

தனக்கு பெத்திக் லாரன்ஸ் பிரவு பிறந்த நாள் வாழ்த்து கூறியதற்கு நன்றி கூறும் விதமாக மாகாத்மா காந்தி அந்த கடித்தை எழுதியுள்ளார். ஒரு பக்கம் அளவிற்கு எழுதப்பட்ட அந்த கடிதம் தற்போது ஏலம் விடப்பட உள்ளது. ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ள இந்த கடிதம் ரூ.15லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.