கைவிடப்பட்டதா விக்ரமின் ‘மகாவீர் கர்ணா’……?

‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவான படம் ‘மகாவீர் கர்ணா’.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் உருவானது.

சில நாட்களாகவே இந்தப் படத்தைத் தவிர்த்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விக்ரம். இந்நிலையில், தற்போது தனது புதிய படத்தை ஆர்.எஸ்.விமல் அறிவித்துள்ளார்.

திருவிதாங்கூர் வரலாற்றில் இருக்கும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களை வைத்துப் புனையப்பட்டிருக்கும் கற்பனைக் கதை இது என்று சொல்லும் விமல், பிரபல மலையாள உச்ச நடிகர் ஒருவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது.

வஷு பாக்னானி, ஜாக்கின் பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.