மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் மற்றொரு இளம் நடிகர்.. விஜய் சேதுபதி வாய்ஸ் தருகிறார்..

விஜய் நடித்திருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் வில்லன் பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி யூ டியூபில் பல லட்சம் வியூஸ் தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது.


கொடூர வில்லனாக விஜய் சேதுபதி நடிக் கிறார். ஆனால் அவரது என்ட்ரி லேட்டா கத்தான் இருக்கும். என்ட்ரிக்கு பிறகு அவரது அட்டகாசம் தொடங்கிவிடுமாம். நடுத்தர வயது தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரது இளம் வயது கதையும் படத்தில் இடம் பெறுகிறது, சின்ன வயது விஜயசேதுபதியாக மகேந்திரன் நடிக்கிறார். சிறுவயது நடுத்தர வயது தோற்றத்தில் கதாபாத்திரத்தில் வித்தியாசம் தெரியாமலிருக்க விஜய் சேதுபதியே மகேந்திரனுக்கும் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறாராம்.

You may have missed