மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா விலகல்: மஹிந்திரா அறிவிப்பு

டெல்லி: மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா விலகுவதாக அறிவித்து உள்ளார்.

2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பணியில் இருந்து விலக போவதாக கூறியிருக்கிறார். பவன் கோயன்கா, நிர்வாக இயக்குநர், சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் 2020ம் ஆண்டு ஏப். 1 முதல் தமது பதவியை தொடருவார். இதை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள மகிந்திரா நிறுவனம், வரும் 15 மாதங்களில் பெரும் மாற்றங்கள் இருக்கும் தெரிவித்துள்ளது.

மேலும் கூறியிருப்பதாவது: இந்த மாற்றம் செபியின் அறிவுறுத்தலாகும். இந்த மாற்றங்கள் நிறுவனத்தின் பாரம்பரியமான நடவடிக்கைகளை காக்கும் என்று நம்புவதாக கூறுகிறது.

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா கூறுகையில், நிறுவனத்தின் அறிவிப்பு மகிழ்ச்சியை தருகிறது. எனக்கு இதுநாள் ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி எனறு கூறினார்.