ஒரு புலி, இன்னொரு புலியை பார்க்கிறது..! 10 லட்சம் பேர் கண்டுகளித்த தோனியின் போட்டோ…!

டெல்லி:  தல தோனி வெளியிட்டுள்ள ஒரு புலியின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் எத்தனை லட்சம் என்று யாருக்குமே தெரியாது. அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிப்பவர்கள் ஏராளம்.

அப்படித்தான் ஒரு போட்டோவை போட்டு இணையத்தை திக்குமுக்காட வைத்துவிட்டார் தோனி. அண்மையில் மத்திய பிரதேசத்தில் உள்ள கன்ஹா புலிகள் சரணாலயத்துக்கு விசிட் செய்திருக்கிறார்.

போனவர் அப்படியே ஒரு புலியை ‘க்ளிக்’கி இருக்கிறார். சரி எடுத்தது தான் எடுத்தோம் என்று இல்லாமல் இன்ஸ்டாகிராமில் அந்த போட்டோவை ரிலீஸ் செய்ய…. ரசிகர்கள் வரவேற்று தள்ளிவிட்டனர். அந்த போட்டோவின் ஒரு பக்கத்தில் தோனியும், மறுபாதியில் புலியும் காணப்படுகிறது.

கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த போட்டோவை ரசித்துள்ளனர். ரசித்ததோடு மட்டும் அல்லாமல் கமெண்டடுகளையும் அள்ளி திக்குமுக்காட வைத்து விட்டனர்.

ஒரு புலி இன்னொரு புலியை பார்க்கிறது, ஒரு புலி மற்றொரு புலி என்ன செய்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறது, உங்களை நாங்கள் மீண்டும் அணியில் பார்க்க வேண்டும், கடைசியாக புலியும், சிங்கமும் ஒன்றாக இருக்கிறது என்று பல கமெண்டுகளை வரிசைப்படுத்தி இருக்கின்றனர்.

 

கார்ட்டூன் கேலரி