படப்பிடிப்பில் பர்த் டே கொண்டாடிய மகிமா

 

“சாட்டை’ படம் மூலம் அறிமுகமானவர் மகிமா நம்பியார். அதன் பிறகு  ‘குற்றம் 23’ படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விட்டார்.

தற்போது “இரவுக்கு ஆயிரம் கண்கள்” மற்றும், “ஐங்கரன்” படங்களில் நடித்து வருகிறார்

ஐங்கரன் படப்பிடிப்பில் நடித்துவரும் மகிமாவுக்கு இன்று பிறந்தநாள்.

படப்பிடிப்பு தளத்துக்கே கேக் ஆர்டர் செய்தார் படத்தின் இயக்குநர் ரவி அரசு.

கேக் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி, சுற்றி நின்று அனைவரும், “ஹேப்பி பர்த்டே..” பாடலைப் பாட.. உற்சாகமும் வெட்கமுமாய் கேக் வெட்டினார் மகிமா.

வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டவர், அனைவருக்கும் தன் கையாலேயே கேக் ஊட்டிவிட்டார்.

“படப்பிடிப்பில் இருப்பது போலவே தோன்றவில்லை. குடும்பத்தினரும் இருப்பது போலவே தோன்றுகிறது” என்றார் நெகிழ்ச்சியாக.

பர்த் டே பேபிக்கு நாமும் வாழ்த்து சொல்லிருவோம்.. ஹேப்பி பர்த் டே மகிமா!