டில்லி

கிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனமும் ஃபோர்ட் நிறுவனமும் இணைந்து கார்கள் தயாரிக்க ஒப்பந்தம் இட்டுள்ளன.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் மற்றும் ஃபோர்ட் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களுமே மிகவும் புகழ்பெற்றவை ஆகும். கடந்த 2017 ஆம் வருடம் கொள்கை பூர்வமாக இரு நிறுவனங்களும் இணைந்தன. அதன் பிறகு கார்களில் பல புது தொழில்நுட்பமான பவர் டிரேயின் ஸ்டீயரிங் உள்ளிட்டவற்றை இரு நிறுவனங்களும் இணைந்து 2018ல் அறிமுகப்படுத்தின.

இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களும் இன்று மத்திய அளவிலான கார்களை இந்தியாவில் இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த  கார்களில் மகிந்திரா நிறுவனத்தின் பவர்டிரெயின் ஸ்டீயரிங் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் இடம் பெற உள்ளன. மேலும் ஃபோர்ட் நிறுவனத்தின் பல சிறப்பு தொழில் நுட்பங்களும் இந்த புதிய வகை கார்களில் இடம் பெற உள்ளன.

இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் நன்மை அடையும் என கூறப்படுகிறது. ஃபோர்ட் நிறுவனம் சர்வதேச அளவில் புகழ் பெற்றதாகும். மகிந்திராவின் தொழில் நுட்பத்துக்கு உலகெங்கும் வரவெற்பு உள்ளது. எனவே இந்த நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கார்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.