அமெரிக்காவில் முதலீட்டை கொட்டும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம்!

மும்பை: பயன்பாட்டு வாகன உற்பத்திக்கு பெயர்பெற்ற மகிந்திரா & மகிந்திரா நிறுவனம், அமெரிக்காவில் புதிய ஆட்டோமொபைல் பிளான்ட் துவங்குவதற்காக பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஆட்டோமொபைல் தொழில்துறை இந்தியாவில் வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில், உள்நாட்டில் முதலீடு செய்வதை ஒத்திவைத்து வருகிறது அந்நிறுவனம்.

மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தின் துணை அமைப்பான மகிந்திரா ஆட்டோமோடிவ் நார்த் அமெரிக்கா(MANA), ஆகஸ்ட் முதல் வாரத்தில், அமெரிக்காவின் மிச்சிகனில் ஒரு புதிய ஆட்டோமொபைல் பிளான்ட் நிறுவும் வகையில், RACER டிரஸ்டுடன் நோக்க கடிதத்தை கையெழுத்திட்டுள்ளது.

தொழில்துறை மதிப்பீட்டின்படி, மகிந்திரா நிறுவனம் புதிய பிளான்ட்டிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யும் என்று கணிக்கப்படுகிறது. அதேசமயம், இந்தியாவிலோ, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 1500 தற்காலிக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது இந்நிறுவனம்.