அசரவைக்கும் ” மகிந்திரா மாரஸ்ஸோ “ – 50 நாளில் 10,000 முன்பதிவுகள் பெற்று சாதனை!!!

பல்முனைப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மகிந்திரா மாரஸ்ஸோ 50 நாட்களில் 10,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.

marazzo

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக மகிந்திரா & மகிந்திரா லிமிடெட் விளங்குகிறது. இதன் புதிய மாடல் கார் ஆன மாரஸ்ஸோவிற்கு, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கியது. இதையடுத்து மாரஸ்ஸோ தேசிய அளவில் செப்டம்பர் 3ம் தேதி சந்தையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் 50 நாட்களில் 10,000 முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

marazzo

இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப்பிரிவு தலைவர் வீஜே நக்ரா, ”குறுகிய காலத்தில் மாரஸ்ஸோ மிகப் பிரபலமாகி உள்ளது. ஆட்டோ கம்யூனிட்டியால் இந்த கார் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்பான வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்றார்.

வாடிகையாளர்களை பெரிதும் கவர்ந்த இந்த மகிந்திரா மாரஸ்ஸோ ரூ.9.99 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. இது டோயோடா இன்னோவா மாடலுக்கு போட்டியாக 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது.