அஜய்தேவ்கனின் ‘மைதான்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்….!

 

அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படத்தை தற்போது 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு மாற்றிவிட்டது படக்குழு. கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.