பெங்களூரு:

சாலை விரிவாக்கத்துக்காக பெங்களூரு விமான நிலையம் செல்லும் முக்கிய சாலை அடுத்த 2 ஆண்டுகளுக்கு மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஜுன் 10-ம் தேதி முதல் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் செல்லும் 1.4 கி.மீ தொலைவிலான முக்கிய சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

தற்போது 4 வழிச்சாலையாக இருப்பதை 10 வழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த சாலை மூடப்பட்டிருக்கும்.

சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படும்.

கெம்பகவுடா விமான நிலையம் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய விமான நிலையமாகும். தனியார் மற்றும் அரசு இணைந்து இந்த விமான நிலையத்தை உருவாக்கினர்.

கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான நிலையம், 37 பயணிகள் விமானங்கள் மற்றும் 12 சரக்கு விமான சேவையுடன் தொடங்கப்பட்டது.