போலி ஏடிஎம் வழக்கில் கைது செய்யப்பட்ட  முக்கிய குற்றவாளிக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு

புதுச்சேரி போலி ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி சந்துருஜிக்கு, சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி ஏடிஎம் கொள்ளை மோசடி வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சந்துருஜி. இவர்,  80 நாட்களுக்கு பிறகு சென்னையில் கைது செய்யப்பட்டார். இது குறித்து  புதுச்சேரி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துருஜி, ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளின் தகவலை சர்வதேச மோசடி கும்பலிடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டு தயாரித்து ஸ்வைப்பிங் மிஷின் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்கள். ம், இதில் சர்வதேச குற்றவாளிகளுடன் சந்துருஜிக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதால்,  சர்வதேச போலீஸ் உதவியுடன் மோசடி கும்பல் கண்டறியப்படுவர்கள்”  என  தெரிவித்தார்.

மேலும்  முக்கிய குற்றவாளி சந்துருஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனவும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தெரிவித்தார்