16 ஆண்டுகளுக்குப் பின் அக்‌ஷர்தாம் குண்டு வழக்கு குற்றவாளி கைது

கமதாபாத்

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் உள்ள அக்‌ஷர்தாம் கோவில் குண்டு வெடிப்பு வழக்கு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் உள்ள அக்‌ஷர்தாம் கோவிலில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. பாகிஸ்தான் நாட்டு தீவிரவாத இயக்கமான லஷ்கர் ஈ தொய்பா நடத்திய இந்த தாக்குதலில் 30 பேர் பலியானார்கள் . மற்றும் 80 பேர் காயம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட இரு பயங்கர வாதிகளையும் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளான அப்துல் ரஷித் மற்றும் முகமது ஃபரூக் சேக் ஆகிய இருவரும் இந்தியாவில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த குண்டு வெடிப்பின் சூத்திரதாரி என கருதப்படும் அப்துல் ரஷீத் கடந்த ஆண்டு கைது செய்யப்படான். இந்த குண்டு வெடிப்புக்கு நிதி உதவி அளித்த முகமது ஃபரூக் வெகு நாட்களாக ரியாத்தில் தலைமறைவாக இருந்தான்.

நேற்று ரியாத்தில் இருந்து விமானம் மூலமாக முகமது ஃபரூக் அகமதாபாத் வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது அதை ஒட்டி அகமதாபாத் விமான நிலையத்தில் அவன் வந்து இறங்கியதும்கைது செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து பிடிபட்ட முகமது ஃபரூக்கிடம் விசாரணை நடந்து வருகிறது.