கமல் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் விலகல்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் விலகியுள்ளார்.

சமீபத்தில் கட்சி துவங்கிய கமல்ஹாசன், கட்சியை வழி நடத்த 16 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை அமைத்தார். இதில் நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் நாசரின் மனைவி கமீலா, வழக்கறிஞர் ராஜசேகர் உள்ளிட்டோர் இருந்தனர்.

வழக்கறிஞர் மூலமாக முன்னாள் காவல் அதிகாரி மவுரியா, ஸ்டார் ஜெராக்ஸ் சௌரிராஜன் உட்பட பலர் கமல் கட்சியில் சேர்ந்தனர்.

இந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக வழக்கறிஞர் ராஜசேகர் மக்கள் நீதி மய்ய கட்சியில் இருந்து விலகிவிட்டார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெறும் என கமல் தெரிவித்துள்ள நிலையில், ராஜசேகரின் விலகல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.