உன்னாவ் பலாத்கார வழக்கு : முக்கிய சாட்சி மரணம்

ன்னாவ்

த்திரப்பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது பெண் பாஜக எம் எல் ஏ வால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி மரணம் அடைந்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார்.  இந்த புகாரை திரும்ப பெற வேண்டும் என வற்புறுத்தி சிறுமியின் தந்தை பப்பு சிங்கை குல்தீப் சிங் தர்ப்பினர் தாக்கினார்கள்.   இதில் காயமடைந்த பப்பு சிங் மரணம் அடைந்தார்.

அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததால் அந்தப் பெண் முதல்வர் யோகி வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்றார்.   அதன் பிறகு வழக்கு பதியப்பட்டது.   உ பி அரசு இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்றியது.   சிபிஐ அதிகாரிகள் குல்தீப் சிங் மற்றும்சிலரை கைது செய்துள்ளனர்.   இந்த வழக்கின் முக்கிய சாட்சியான யூனூஸ் என்பவர் திடீரென மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.

கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் யூனூச் மரணம் அடைந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.   இதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   யூனூஸ் மரணம் குறித்து அவர் குடும்பத்துக்கும் சிபிஐக்கும் தகவல் அளிக்கப்படாமல் புதைக்கப்பட்டதாக அவர் கூறி உள்ளார்.

அத்துடன் யூனூசின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.   ஆனால் யூனுசின் சகோதரர் தனது சகோதரர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   அந்தப் பெண்ணின் மாமா தன்னை அணுகி யூனுசின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய கோரிக்கை விடுத்தல் ரூ. 10 லட்சம் தருவதாக ஆசை காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்துக்கு இது வரை சிபிஐ எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.