பராமரிப்பு பணி: சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் சேவை இன்றுமுதல் மாற்றம்!

சேலம்:

ராமரிப்பு பணிக்காக இன்று  முதல் சேலம் -கோவை பாசஞ்சர் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாகவும்,  70 நாட்களுக்கு ஒரு பகுதி ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே அறிவித்து உள்ளது. மேலும்,  தினமும் ஈரோட்டில் இருந்து ரயில்  புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வீரபாண்டி-சேலம் இடைப்பட்ட பகுதியில் இன்று  (22ம் தேதி) முதல் இரண்டரை மாதத்திற்கு தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், இம்மார்க்கத்தில் இயங்கும் சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் (66603), நாளை (22ம் தேதி) முதல் மார்ச் 31ம் தேதி வரை 70 நாட்களுக்கு ஒரு பகுதியாக சேலம்- ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் கோவை- சேலம் பாசஞ்சர் ரயில் (66603), நாளை முதல் 70 நாட்களுக்கு ஈரோடு-சேலம் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

இதே போல 70 நாட்களுக்கு (ஞாயிறு தவிர) ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), மகுடஞ்சாவடியில் 15 நிமிடம் நின்று தாமதமாக இயக்கப்படும்.

இதேபோல், திருப்பூர்-வஞ்சிப்பாளையம் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், சேலம்-கோவை பாசஞ்சர், இன்று (21ம் தேதி) முதல் பிப்ரவரி 10ம் தேதி வரையில் ஈரோட்டில் இருந்து 45 நிமிடம் தாமதமாகவும்,

கோவை-பாலக்காடு பாசஞ்சர் (66607), கோவையில் வரும் 10ம் தேதி வரை 70 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும்.

இவ்வறு அதில் கூறப்பட்டுள்ளது.