போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: ஓ.பி.எஸ். அணி மைத்ரேயன்  கவலை

சென்னை:

ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லத்தில் நேற்ற வருமானவரி சோதனை நடைபெற்றதற்கு ஓபி.எஸ். அணியைச் சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“காரணம் என்னவாக இருந்தாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. “.மைத்ரேயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த ரெய்டு குறித்து ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எவரும்  எதிர்த்து கருத்து சொல்லாத நிலையில் மைத்ரேயன் மட்டும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.