அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து: ஏராளமான பொருட்கள் சேதம்

சென்னை:

ரக்கோணம் ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக  ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த அரக்கோணத்தில்  ரயில்வே பணிமனை உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  24 மணி நேரமும் பரபரப்புடன் இயங்கும் இந்த பனிமணையில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு அறையில்  இன்று காலை பயங்கர திடீர் விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் புகை ஏற்பட்டது.

தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி கட்டுக்குள்  கொண்டு வந்தனர்.  இந்த தீ விபத்தில் ரயில்  பெட்டிகள் உள்பட ஏராளமான ரயில் சம்பந்தமான பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக பனிமணையில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் உடடினடியாக அப்புறப்படுத்தப்பட்டன. தொழிலாளர்களும் உடடினயாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி