இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 4 பேர் உயிரிழப்பு: இயக்குநர் ஷங்கர் படுகாயம்

சென்னை: சென்னை அருகே இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார்.  படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இந்தியன் 2 படத்திற்கான செட் வேலையின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் துணை இயக்குநர்கள் ஆவர். இயக்குநர் ஷங்கரின் கால் முறிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்து உள்ளனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்த விபத்தால் லைகாவுக்கா, ஷங்கருக்கா, கமலுக்கா யாருக்கு நேரம் சரியி்ல்லைன்னு தெரியவில்லை. உயிரிழந்த துணை இயக்குநர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.