Random image

மத்தியஅரசுமீது குற்றச்சாட்டு: பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பதவியில் இருந்து மேஜர் பி.சி.கந்தூரி நீக்கம்

டில்லி:

த்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானது அல்ல என்று நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியது. இந்த நிலையில், அதன் தலைவர் பொறுப்பில் இருந்த பாஜக எம்.பி.யான மேஜர்  பி.சி.கந்தூரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக, கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். பாஜக எம்.பி.யான இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றி உள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த மாதம் பிப்ரவரி மாதம்  1-ம் தேதி நாடாளுமன்றத் தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பாதுகாப்புத்துறைக்கு 2 லட்சத்து 74 ஆயிரத்து 114 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரான, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பி.சி.கந்தூரி   சமீபத்தில் மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,  பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல என்று கூறப்பட்டுள்ளது.

ராணுவத்தை நவீனப்படுத்த 21 ஆயிரத்து 338 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  ஆனால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு மட்டுமே 29 ஆயிரத்து 33  கோடி  ரூபாய்  தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையால்  63 சத விகித பணம் ஊதியத்திற்கே சென்று விடுவதாகவும் எஞ்சிய தொகையில் ராணுவத்தை நவீனப்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போதிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இல்லாத நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்து.

சீன அரசு தனது ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வழக்கத்தை விட 7 சதவிகிதம் உயர்த்தி உள்ள நிலை யில், மத்திய அரசின் குறைவான நிதி ஒதுக்கீட்டிற்கு ராணுவ உயர் அதிகாரிகளும் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா எம்.பியும்,    பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர்  பி.சி.கந்தூரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பி.சி கந்தூரி பாதுகாப்பு குழு தலைவர் பதவியில் இருந்தும்  நீக்கப்பட்டார்.

இதுபேல, மத்திய பிரதேசத்தை பாஜ எம்.பி. நிலக்கரி மற்றும் ஸ்டீல் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதே மாநிலத்தை சேர்ந்த சிந்தாமணி மால்வியா நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை மற்றும் வெளிவிவகாரத்துறை நிலைக்குழுவில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏனென்றால், நிதிக்குழு தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரப்ப மொய்லியும், வெளிவிவகாரத்துறைக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் தலைவராகவும் மற்றும் ராகுல்காந்தி உறுப்பினராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.