வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்து ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.  இந்த முடிவு இறுதியாக அறிவிக்கப்பட்டதையொட்டி டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை முற்றுகை இட்டு நாடாளுமன்ற கட்டிடத்தைத் தாக்கினர்.  இதில் ஒரு பெண் மரணமடைந்து ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இந்த முற்றுகை தாக்குதலுக்குக் காரணம் டிரம்ப் வெளியிட்ட வலைத்தள பதிவுகள் என கூறப்பட்டது.   வரம்பின் வன்முறையை தூண்டும் பதிவுகள் நீக்கப்பட்டு அவரது சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டன.   இதையொட்டி அவரது பதவிக் காலம் முடியும் முன்பே அவரை  பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் செனட் சபை எனப்படும் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்குப் பெரும்பான்மையான செனட்டர்கள் வாக்கு அளித்துள்ளனர்.  மொத்தமுள்ள 232 செனட்டர்களில் 197 வாக்குகள் டிரம்ப் பதவி நீக்கத்துக்கு கிடைத்துள்ளன.   இதற்கு டிரம்ப் ஆதரவாளர்களின் தலைநகர் முற்றுகையே முக்கிய காரணமாகும்.  அமெரிக்க வரலாற்றிலிரண்டு முறையாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரே அதிபர் டிரம்ப் ஆவார்.

டிரம்ப்  கட்சியைச் சேர்ந்த 10 செனட்டர்கள் அவரது பதவி நீக்கத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.  மேலும் கே கிராங்கர், ஆண்டி ஹாரிஸ், கிரெக் மர்பி, டேனியல் வெப்ஸ்டர் என்னும் நால்வர் வாக்களிபில் கலந்து கொள்ளவில்லை.  இந்த வாக்கெடுப்பு விவரங்கள் செனட் சபைக்கு அளிக்கப்பட்டுள்ளன.   செனட் விரைவில் இதன் மேல் நடவடிக்கை எடுத்து டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய உள்ளது.