சென்னை,

டப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகரிடம் விளக்கம் கேட்டு ஐகோர்ட்டு அனுப்பிய நோட்டீசை வாங்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்து உள்ளாளர்.

எடப்பாடி தலைமையிலான அரசுக்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆதரவை விலக்கி கொண்டதை தொடர்ந்து, எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அதற்காக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கை ஏற்கப்படாததால், கடந்த 12ந்தேதி   திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பபட்டது.

அதில், அதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது ஐகோர்ட்டு, சட்டமன்ற சபாநாயகர், கவர்னரின் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு காரணமாக உயர்நீதிமன்றம் வழங்கிய நோட்டீஸை வாங்க சபாநாயகர் தனபால் மறுப்பு  தெரிவித்துள்ளார்.

இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.