நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்து உள்ளனர்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்து உள்ளனர் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார்.

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகளை ஒத்தி வைக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கையும் உச்ச நீதி மன்றத்தில் தள்ளுபடியானது.

இதுஒரு பக்கம் இருக்க, நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுவிட்டது. இந் நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி இருப்பதாவது: 24 மணி நேரத்தில், ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்த 8.58 லட்சம் பேரில் 7.5 லட்சம் பேர் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துவிட்டனர்.

அதே போன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 15.7 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த தகவலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. இது தேர்வு நடக்க வேண்டும் என்று மாணவர்கள் விரும்புவதை காட்டுகிறது.

ஜேஇஇ தேர்வுக்கு 570ல் இருந்து 660 ஆக மையங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. நீட் தேர்வு மையங்களும் 2,546 ல் இருந்து 3,842 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.