பம்பா:

பரிமலை அய்யப்பன் கோயிலில்  இன்று (ஜன.14) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டுள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் முழுவதும் மனித தலைகளாகவே காணப்படுகிறது.

சபரிமலை மகரவிளக்கு பூஜையையொட்டி, ஏற்கனவே  எரிமேலியில் இருந்து பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது அய்யப்ப பக்தர்கள் தங்கள்  சரண கோ‌ஷம் முழங்க ஆடிப்பாடி வழிபட்டனர்.

சபரிமலைக்கு புதியதாக வரும கன்னி சாமிகள் எப்போது  வருகை தராமல் இருக்கிறார்களோ அப்போது தான் தனது திருமணம்  மாளிகை புரத்தம்மனுடன் நடைபெறும் என்று அய்யப்பன் கூறியதாக ஐதீகம்.

இதன்படி மாளிகைபுரத்தமன் சபரிமலையில் எழுந்தருளி இந்த வருடமாக தனது திருமணம் நடைபெறுமா என்று காத்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

அதையடுத்து சரங்குத்தி வரும்போது கன்னி சாமிகள் சபரிமலைக்கு வருகை தந்தற்கு அடையாளமாக அங்கு சரங்குத்தப்பட்டு இருப்பதை பார்த்து  ஏமாற்றத்துடன் மீண்டும் மாளிகைப்புரத்திற்கு திரும்பி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

வருடந்தோறும், சபரிமலைக்கு கன்னிசாமிகள் வந்தவண்ணம் இருப்பதால் இந்த நிகழ்வும்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மரக விளக்கு பூஜையையொட்டி, பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும் திருவாபரணப் பெட்டி இன்று மாலை சந்நிதானம் வந்தடையும்.  அய்யப்பன் விக்கிரகத்துக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

மகர விளக்கு பூஜையின்போது, பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மகர ஜோதியாகத் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதிகம்.

இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றம் அமைத்த 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு, நிலக்கல், பம்பை, சந்நிதானம் ஆகிய இடங்களை ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தனர்.

சபரிமலையில் போலீஸார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். பரபரப்பாக காணப்படுகிறது.