டெல்லி:

கொரோனா ஒழிப்பு பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஸ்எடி வரி விதிக்கக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், அதை தடுக்கும்  கவசங்களான சானிடைசர், முக்கவசம் உள்பட ரத்த பரிசோதனை, வெண்டிலேட்டர்கள், சோதனை கருவிகள் போன்ற அனைத்துக்கும் மத்திய அரசு 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரியை சுமத்தி உள்ளது.

வெண்டிலேட்டர்களுக்கு 12%, முககவசத்துக்கு 5%, சோதனைக் கருவிகளுக்கு 12%, சானிடைசருக்கு 18% பி பி இ கவச உடை ரூ.1000க்கு குறைவான விலை இருந்தால் 5% அதற்கு மேல் விலை இருந்தால் 12% என  ஜி எஸ் டி வரி விதிக்கப்படுகிறது. இதனால், அந்த பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உயிர்க்காக்கும் பொருட்களான அவைகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.