சேலம்:

ர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ்  தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் நாளன்று  வாக்குச்சாவடியில் யாரும் இருக்கமாட்டார்கள்… நீங்கள்  செய்ய வேண்டியதை செய்தால் வெற்றி கிடைக்கும் என்று பேசினார்.

வாக்குப்பதிவு அன்று கள்ள ஓட்டு போட்டு தன்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ற வகையில், பாமகவினரிடையே  அன்புமணி ராமதாஸ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக கூட்டணி யில் இணைந்துள்ள பாமகவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பாமக தலைவர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருப்போரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கள்ள ஓட்டு போடுவது பற்றி மறைமுகமாகப் பேசினார்.

“திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எதற்கும் வாக்கு வங்கியே கிடையாது. திமுகவுக்கு மட்டுமே கொஞ்சம் வாக்கு வங்கி உள்ளது. தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் திமுக கூட்ட ணியைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். நாம் மட்டும்தான் இருப்போம். அப்படி யென்றால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் பேசுவது உங்களுக்குப் புரிகிறதா? செய்ய வேண்டியதை செய்வோம். அப்புறம் என்ன? இந்த இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றுவிடுவார்கள்” என்றார்.

பொதுக்கூட்ட மேடையிலேயே கள்ள ஓட்டு போடுவது பற்றி மறைமுகமாக அன்புமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

அன்புமணி பேசும் வீடியோ…