இந்திய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை: ரூ .8,697 கோடி 4 ஜி டெண்டரை ரத்து செய்ய பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு

டெல்லி: ரூ .8,697 கோடி 4 ஜி டெண்டரை ரத்து செய்ய பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியா தயாரிப்புகளை தயாரிக்க உரிய முன்னுரிமை தரும் பொது கொள்முதல் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து உள்ளூர் வினியோகிஸ்தர்களையும் அழைத்து, அவர்களின் கருத்துக்களை எடுத்து, பின்னர் தகுதி அளவுகோல்கள் போன்ற விதிமுறைகளை இறுதி செய்யும், அதன் பிறகு அது ஒரு புதிய டெண்டரை அறிவிக்கும்.

பிஎஸ்என்எல் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறதா என்பதைக் கண்காணிக்கும் ஒரு குழுவையும் தொலைத்தொடர்புத் துறை உருவாக்கும்.  மேலும் இந்தியாவில் தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதை அரசாங்கம் முற்றிலுமாக தடை செய்யவில்லை. விதிகள் உள்ளூர் வினியோகிஸ்தர்களுக்கு குறிப்பிட்ட நன்மைகளை வழங்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன.

உதாரணமாக, 2017ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பொது கொள்முதல் (இந்தியாவில் தயாரிக்க விருப்பம் என்ற அடிப்படையில்) உத்தரவு, அரசாங்க டெண்டரில் மிகக் குறைந்த ஏலதாரர் உள்ளூர் வினியோகஸ்தரிடம் இருந்து வந்தால், அந்த நிறுவனத்துக்கே முழு ஒப்பந்தமும் வழங்கப்படும்.

ஆனால் குறைந்த விலைக்கு ஏலம் எடுப்பவர் உள்ளூர்தாரர் இல்லை என்றால் 50% மட்டுமே அதற்கு வழங்கப்படும். மீதமுள்ள 50% இந்திய நிறுவனங்களிடையே மிகக் குறைந்த ஏலதாரருக்கு வழங்கப்படும்.