டிகர் அஜீத் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு விசுவாசம் என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயக்குனர் சிவாவுடன் இணைந்து, வீரம், வேதாளம், விவேகம் என வெற்றி படங்களில் நடித்து வந்த அஜீத் மீண்டும் சிவாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

இந்த புதிய படத்திற்கும் வி என்ற வெற்றி எழுத்திலேயே விசுவாசம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தையும், சத்யஜோதி பிலிம் நிறுவனமே தயாரிக்கிறது.

இப்படத்தின் தலைப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இன்று சத்யஜோதிபிலிம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி, 2018ம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.