கண்ணில் படும் பெண்களை எல்லாம் தேவதைகளாக்கிடும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்….!

இணையத்தை கலக்கும் அச்சு அசலாக நயன்தாரா போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

TIK TOK போன்ற பொழுது போக்கு செயலிகள் வந்த பின்னர் அச்சு அசலாக பிரபலங்களை போன்றே இருக்கும் பல்வேறு சாமானிய மனிதர்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவத் துவங்கியது.

நயன்தாரா போலவே இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ சமீபத்தில் டிக்டாக், ஹலோவில் வைரலானது.

இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் நயன்தாரா போலவே மேக்கப் போட்டு விதவிதமான ஸ்டில்களை எடுத்து பதிவு செய்துள்ளார்.

இவருக்கு மலேசியாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான கண்ணன் ராஜமாணிக்கம் என்பவர் தான் நயன்தாராவை போல ஒப்பனை செய்துள்ளார்.

அவர் தான் எனக்கு மேக்-அப் போட வேண்டும் என்று வரிசை கட்டி நிற்கும் பெண்களின் பட்டியல் ஏராளம். இவரின் டேட் கிடைக்கவில்லை எனில் தன் திருமணத்தையே அவர் தரும் டேட்டிற்கு மாற்றிக்கொள்கிறார்கள் எனில் ஆச்சரியம் இல்லை .

மேலும், இவர் உலக அழகி ஐஸ்வர்யா மற்றும் நடிகை ஸ்ரேயா போன்றவர்களின் தோற்றத்திலும் முக ஒப்பனை வேறு சில பெண்களுக்கு செய்துள்ளார்.