டெல்லி:

வருமான வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்பது சட்டவிரோதமாகும் என்று உச்சநீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது.

அனைத்து அரசு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கும் நோக்கத்தோடு மோடி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் கட்டாய ஆதார் அட்டை கொள்கையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆதார் தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்ஹியிடம் சில கேள்விகளை இன்று எழுப்பியது.

‘‘மோசடியை கையாளுவதற்காக ஆதார் வலுக்கட்டாயமாக திணக்கப்படுகிறதா?. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண் டும்’’ என்று கேட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் கார்டு பெற ஆதார் கட்டாயம் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. ‘‘வரிவிதிப்பு முறையை ஒழுங்குபடுத்தவும், பான் கார்டை தவறாக பயன்ப டுத்துவதை தவிர்க்கவும் ஆதார் கட்டாயம்’’ என்று மத்திய அரசு காரணம் கூறியிருந்தது. ‘‘ஆதார் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இது மீறும் செயலாகும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 1.2 பில்லியன் குடிமகன்கள் பயோ மெட்ரிக் தகவல்களின் மையம் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் பேசுகையில், ‘‘கருப்பு பணத்துக்கு முடிவு கட்டும் வகையில் தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பல எண்ணிக்கையிலான பான் கார்டுகளை பயன்படுத்தி பெருமளவிலான நிதி ஷெல் (போலி) நிறுவனங்களுக்கு திருப்பப்படுகிறது. இதை தடுக்க ஆதார் கட்டாயமாக்கப்படுவது தான் ஒரே வழி’’ என்றார்.

கடந்த மார்ச் மாதத்தில் ‘‘சமூக நல திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட கூடாது’’ என்று உ ச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ‘‘நலத் திட்டங்கள் அல்லாத இதர திட்டங்களுக்கு ஆதார் பயன்படுத்தலாம்’’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

‘‘வங்கி கணக்கு தொடங்குது போன்றவற்றுக்கு ஆதார் பயன்படுத்துவதை தடுக்க முடியாது’’ என்று நீதிபதி கூறியிருந்தார். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று 2017ம் ஆண்டு நிதிச் சட்டத்தில் பிரிவு 139 ஏஏ.ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருத்தமற்ற வழிவகையால் பான் கார்டு வாங் குவதற்கும், பான் எண் தொடர்வதற்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.