ம.க.இ.க பாடகர் கோவன் திருச்சியில் கைது

திருச்சி:

மக்கள் கலை இலக்கிய கழகத்தை (மகஇக) சேர்ந்த பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார். பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல் பாடியதற்காக இவரை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடியதற்காக 2015ம் ஆண்டு கோவன் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்

தற்போது விஹெச்பி ரதயாத்திரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோவன் பாடல் பாடியுள்ளார். பிரதமர், முதல்வரை விமர்சிக்கும் விதமாக பாடல் பாடியதாகக் கூறி கோவனை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.