சென்னை:

க்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் அறிவித்துள்ளார் கட்சித் தலைவர்  கமல்ஹாசன். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மண்டலங்கள் வாரியாக மாநிலச் செயலாளர்கள், பொதுச்செயலாளர்கள் என அனைத்து பிரிவுகளிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவது,

கட்சி தொடங்கிய 14 மாதங்களில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் பெரு மக்கள் ஆதரவு கிடைத்தது உற்சாகம் அளித்துள்ளதாகவும்,  தமிழக அரசியலை மாற்றியமைக்க வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில், இன்னும் வலிமையோடு களத்தில் இறங்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர்களாக ஏ.அருணாசலம்,  ஏ.ஜி.மவுரியா, குமரவேல், சவுரிராஜன், உமாதேவி ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு உள்ளார்.  அருணாச்சலம் கமல் அலுவலகத்தை பார்த்துக்கொள்வார் என்றும், மவுரியா வடக்கு-கிழக்கு மண்டலத்தை பார்த்துக்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரவேல் தெற்கு மேற்கு மண்டலங்களின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநிலச் செயலாளர்கள் பட்டியலில் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு செயலாளர்களாக முரளி அப்பாசும், சுகாசினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். காந்தி கண்ணதாசன் தரவுகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வார் என்றும், சத்யமூர்த்தி மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தை பார்த்துக்கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.

கமீலா நாசர் சென்னை மண்டல செயலாளராகவும், மயில்சாமி கோவை மண்டல செயலாளராகவும், பொன்குமரன் நெல்லை மண்டல செயலாளராகவும், வழக்கறிஞர் ராஜசேகர் சேலம் மண்டல செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.