கமல் தலைமையில் இன்று மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்
சென்னை:
நடிகர் கமலஹாசன் தலைமையில் இன்று மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் விரைவில் அறிவிக்கப்பட உள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் இன்று சென்னையில் கூடுவதாக கமல் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், . ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மாநிலம் முழுவதும் உள்ள செயற்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் சென்னையில் குவிந்துள்ளனர்.
கமல்ஹாசன் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.