மக்கள் நீதி மய்யம் தமிழக இடைத் தேர்தலில் போட்டியிடாது : கமலஹாசன்  அறிவிப்பு!

சென்னை

மிழக சட்டப்பேரவையில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் காளியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.  நேற்று இதற்கான அறிவிப்பை இந்தியத் தலைமைத் தேர்தல்  ஆணையாளர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள்  போட்டியிடுகின்றன.

முக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தங்கள்  கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரையில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் முன்னணி நடிகருமான கமலஹாசன் இன்று இடைத் தேர்தல் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கமலஹாசன், “வாழ்த்துக்கள். வரும் 2021 ஆம் வருடச் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களின் ஒருமித்தஅதரவுடன்  ஆட்சி அமைத்து பழைய ஊழல் மிக்க கட்சிகளை நீக்கி தமிழக மக்களுக்குத் தேவையான நல்லாட்சியை அமைக்கத் தேவையான பணிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி செய்து வருகிறது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத் தேர்தல் என்னும் பெயரில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் பலத்தை மக்களுக்குக் காட்டவும்,  பலத்தை அதிகரிக்கவும்  லஞ்ச நாடகங்களை நடத்தும் நிலையில் அதில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கு பெற விரும்பவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.