காங்கிரசுடன் கூட்டணி வைப்பேன் : கமல் அறிவிப்பு

சென்னை

காங்கிரசுடன் தமது கட்சி கூட்டணி அமைப்பதை மறுப்பதற்கில்லை என கமலஹாசன் கூறி உள்ளார்.

பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்று நேற்று சேலத்தில் ஒரு சிறப்பு பேட்டி நிகழ்வை மக்கள் முன்னிலையில் நடத்தியது. அந்த நிகழ்வில் பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கலந்துக் கொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு கமலஹாசன் பதில் அளித்தார்.

கமலஹாசன் தனது பதிலில், “மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்ப்போவதில்லை. காங்கிரசுடன் கூட்டணி அமைக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை; திமுகவும் காங்கிரசும் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அந்த கூட்டணி உடையவும் வாய்ப்பு உண்டு.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி யிடும். திமுகவையும் அதிமுகவையும் தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் மக்கள் நீதி மய்யம் சரிசமமாக அணுகுகிறது.

தமிழக அரசு கல்லூரிகளுக்கு அனுபிய ரகசிய சுற்றரிக்கையில் நடிகர்களை உள்ளே அனுப்பக்கூடாது எனவும் அவர்களை அரசியல் பேச அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது ஆனால் அதற்கு அடுத்த நாள் முதல்வர் ஒரு கல்லூரியில் அரசியல் பேசுகிறார்.

கல்லூரிகளில் அரசியல் பேசுவது என்பது குற்றம் இல்லை. எப்போதுமே அனைத்து மாணவர்களுக்கும் அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. எனவே அனைத்துக் கட்சிகளும் கல்லுரிகளில் அரசியல் பேசுவதும் தவறு கிடையாது.

பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதால் அங்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும்” என கமலஹாசன் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி