சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் 24 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.

சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. அவ்விரு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கடந்த 10ம் தேதி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. பின்னர் கடந்த 12ம் தேதி 43 வேட்பாளர்கள் அடங்கிய 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஆயிரம் விளக்கு, ராயபுரம், திருவாரூர் உள்ளிட்ட 24 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.