நான்கு நகரங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகம்
கோயம்புத்தூர்
கமலஹாசன் தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகத்தில் நான்கு இடங்களில் தலைமை அலுவலகங்கள் அமைய உள்ளன.
நடிகர் கமலஹாசன் தொடங்கி உள்ள அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சி ஆகும். இந்த கட்சிக்கு மாநில அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோவை நகரில் மக்கள் நீதி மய்யப் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் நேற்று நடைபெற்று அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
அவை பின் வருமாறு :
வழக்கமாக ஒரே நகரில் மட்டும் கட்சியின் தலைமை அலுவலகம் அமைப்பது மரபாகும். அந்த மரபை மாற்றும் வகையில் சென்னை, கோவை, திருச்சு, மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் கட்சியின் தலைமை அலுவலகம் அமைக்கப்படும்ம். கட்சித் தலைவர் கமலஹாசன் இந்த அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திப்பார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது புதிய செயற்குழு உறுப்பினர்களாக காந்தி கண்ணதாசன், சந்திரசேகரன், குருவையா கருபையா, சினேகன், ஜான்சன் தங்கவேல், வழக்கறிஞர் விஜயன், ஹான் சாமுவேல், தருமபுரி ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். கட்சியின் தலைவருக்கு கட்சி உயர்நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமிக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.