சென்னையில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்தோர் கைது

சென்னை

விருகம்பாக்கத்தில் உள்ள மக்கள் பாதை இயக்க தலைமை அலுவலகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தோர் கைது செய்யப்பட்டனர்.

மாநிலம் எங்கும் நீட் தேர்வுக்கு எதிராக கடும் போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த 6 நாட்களாக மக்கள் பாதை இயக்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்த உண்ணாவிரதம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இன்றும் 7 ஆம் நாளாக இது தொடர்கிறது.

இன்று காலை அங்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல வற்புறுத்தினர்.

அதை அவர்கள் மறுத்ததால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கே எம் சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மற்றுமுள்ள மக்கள் பாதை இயக்கத்தின்ர் நெற்குன்றத்தில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மண்டபத்தில் உள்ளோர் காவல்துறையினருக்கு எதிராக அதே இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.