தனுஷுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்…..!

‘அத்ரங்கி ரே’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43-வது படமாகும்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க இருப்பதும் ஏற்கனவே தெரிந்ததுதான். இந்நிலையில் இந்தப் படத்தின் ஹீரோயின் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி நடிகை மாளவிகா மோகனன், D43 படத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த ஜூலை 28-ம் தேதி அன்று தனுஷ் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக, “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ் சார். அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது. உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார் மாளவிகா மோகனன்.