மாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் குழு வெளியிட்ட காமன் டிபி….!

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் வேகமாக பிரபலம் ஆனவர் மாளவிகா மோகனன்.

ரஜினி நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த பேட்ட படத்தின் மூலமாக அவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பின் மாஸ்டர் படத்தில் விஜய்யின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இன்று மாளவிகா மோகனனின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு விஜய் ரசிகர்கள் உட்பட அனைவரும் அதிக அளவுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நேற்றில் இருந்தே #HBDMalavikaMohanan என்ற ஹாஸ் டேக்கில் மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாளவிகாவின் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு இருந்தார். அதில் மாளவிகா தன் கையில் ஒரு ரோஸ் வைத்திருப்பது போல போஸ் கொடுத்திருக்கிறார். அந்த டிபி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதை அதிகம் பேர் ஷேர் செய்து வருகின்றனர்.