மாயமான மாளவிகா மோஹனனின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்…..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மிக குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளவர் மாளவிகா மோஹனன்.

மலையாளம்,கன்னடம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார் மாளவிகா மோஹனன்.

இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ஆக இருந்த மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நடித்த பின் வேற லெவல் ரீச்சை பெற்று விட்டார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.

இந்நிலையில் இன்று திடீரென இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் சில மணி நேரங்கள் மாயமானது, மாளவிகா அக்கவுண்ட் எங்கே என்று அதிர்ச்சியில் இருந்தனர் ரசிகர்கள் .

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட டெக்கனிக்கல் கோளாறினால் இது நடந்துள்ளது என தெரியவந்துள்ளது .தற்போது இவரது அக்கவுண்ட் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.