தனுஷுடன் முதன் முறையாக ஜோடியாக நடிக்கும் ’மாஸ்டர்’ பட கதாநாயகி..

 

‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’’ என்ற இந்தி படத்திலும், ரஜினியுடன் ‘பேட்ட’ படத்திலும் நடித்தவர் மாளவிகா மோகனன்.

விஜய் ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் தனுஷின் பிறந்த நாளின் போது அவருக்கு மாளவிகா வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வாழ்த்துக்களோடு, ’’தங்களுடன் நடிக்க விரும்புகிறேன்’’ என பகிரங்கமாக வேண்டுகோளும் விடுத்திருந்தார். இதனால் இருவரும் புதிய படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாளவிகாவின் கனவு, நனவாகி உள்ளது.

தனுஷ் நடிக்க கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க மாளவிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தனுஷுடன் மாளவிகா முதன் முறையாக இணையும் இந்த படத்தை செந்தில் தியாகராஜன் தயாரிக்கிறார்.

“இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படம் ஆகும். பியாண்ட் தி கிளவ்ட்ஸ், மற்றும் பேட்ட படங்களில் அற்புதமான நடிப்பாற்றலை மாளவிகா மோகனன் வெளிப்படுத்தி இருந்ததால் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தோம்” என்கிறார், செந்தில்.

– பா.பாரதி