ஹீரோக்கள் சம்பளம் மட்டுமல்லாமல் முன்னணி ஹீரோயின் சம்பளங்களும் கோடிகளில் தரப்படுகிறது. மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகன். இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை அதற்குள் மாளவிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.


இந்தியில் ஆக்‌ஷன் கதையொன்றில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றிருக்கிறாராம் மாளவிகா மோகனன். ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தை இயக்கிய ரவி உதய்வார் இயக்க உள்ளாராம். சித்தார்த் சதுர்வேதி ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.இப்படத்திற்காக மாளவிகா மோகனனுக்கு ரூ 5 கோடி சம்பளம் தரப்படுகிறதாம்.
கடந்த 15 வருடமாக நடித்து வரும் நயன்தாரா தற்போதுதான் 3 அல்லது 4 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகை மாளவிகா மிக குறுகிய காலத்தில் நயன்தாரவை சம்பளத்தில் மிஞ்சி இருக்கிறார்.