பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய பாவனா

திருச்சூர்:

சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை பாவனா. வெயில், ஜெயங்கொண்டான், தீபாவளி, அசல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மலையாளத்தில் இவர் முன்னணி நடிகையாவார். தெலுங்கு, கன்னடத்திலும் இவர பிரபலம்.

படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கேரளா மாநிலம் திருச்சூர் சென்றிருந்தார். அங்கு நேற்று இரவு சூட்டிங் முடித்துவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்த போது அங்கமாலி என்ற இடத்தில் மற்றொரு காரில் வந்த வந்த கும்பல் அவரை மறித்து காரில் ஏறியது.

டிரைவரை மிரட்டி காரை தொடர்ந்து ஓட்டச் செய்தனர். கார் ஓடிக் கொண்டு இருந்தபோதே பாவனாவை ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை அந்த கும்பல் எடுத்துள்ளது. மேலும் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளனர். பாலாரி அருகே வந்த போது காரை நிறுத்தி அந்த கும்பல் தப்பிவிட்டது. அருகில் இருந்த ஒரு இயக்குனரின் நண்பர் வீட்டில் பாவனா தஞ்சமடைந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாவனாவின் ஆக்டிங் டிரைவரான மார்டினுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மார்டினை கைது செய்து விசாரணை செய்தனர். அவரது செல்போனில் சுனில்குமார் அக புல்சார் சுனி என்பவருடன் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது.

இந்த பாலியல் தொந்தரவு கொடுத்ததில் சுனில்குமார் முக்கிய குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி