மலையாள நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. துபாயில் தொழில் அதிபராக இருந்தவர்..

கொரோனா வைரஸ் தொற்று உலகை ஆட்டிப்படைக்கிறது. உலக நாடுகள் லாக்டவுனில் நாட்களை கடத்திக்கொண் டிருக்கின்றன. கொரோனா தொற்றால் தினமும் பலர் இறந்து வருகின்றனர்.

 


கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள சங்கரன் குழியை பூர்வீகமாக கொண்டவர் எஸ்.ஏ. ஹாசன். துபாயில் டெக்ஸ்டைல் தொழில் அதிபராக இருக்கிறார். ’துபாய்காரன்’ என்ற மலையாள படத்தை தயாரித்து நடித்தார். 51 வயதான இவருக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலம் பாதிக் கப்பட்டது. காய்ச்சல், சளி மற்றும் மூச்சு திணறல் இருந்தது. அவரை துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக சிகிச்சை அளிக்கத்தொடங்கினர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார். இவருக்கு மனைவி 3 குழந்தைகள் உள்ளனர்.