1995-ம் ஆண்டு ‘மாந்த்ரீகம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானவர் வினாயகன்.

2016-ம் ஆண்டு துல்கர் சல்மான் நாயகனாக நடித்த ‘கம்மட்டி பாடம்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வினாயகனுக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான மாநில விருது கிடைத்தது.

தமிழில் ‘திமிரு’, ‘மரியான்’ ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஃபகத் பாசிலின் ‘ட்ரான்ஸ்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததோடு அந்தப் படத்தின் டைட்டில் பாடலுக்கும் வினாயகன் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் திரைப்பட உலகில் தனது 25-வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வினாயகன் தற்போது இயக்குநராக முடிவெடுத்துள்ளார்.

வினாயகன் இயக்கும் ‘பார்ட்டி’ படத்தை இயக்குநர் ஆஷிக் அபுவும், நடிகை ரீமா கல்லிங்கலும் இணைந்து தயாரிக்கின்றனர். ‘பார்ட்டி’ திரைப்படத்துக்கான திரைக்கதையையும் வினாயகனே எழுதியுள்ளார்.